Wednesday, January 27, 2021

 

பஞ்சாப் சிங்கம் லாலா லஜபதி, பகத் சிங் பிறந்த பொன்நாடு – ராஷ்ட்ரம் தேவோ பவ

 

மாதா.. பிதா.. குரு.. தெய்வம்.. என்று நாம் நம் சந்ததியினருக்கு அறிவு பரிமாற்றம் செய்து வருகிறோம்.

ஒரு படி மேலே போய் நம் தர்மம் என்ன சொல்கிறது என்றால் மாத்ரு தேவோ பவ. .பித்ரு தேவோ பவ... ஆச்சர்ய தேவோ பவ... என்பதற்கு அடுத்து அதிதி தேவோ பவ  என்கிறது.. ஆம் வீட்டிற்கு வரும் விருந்தினர்களையும் தெய்வத்திற்கு சமானமாக சொல்வது சனாதன தர்மம். இது சார்ந்து நாம் பல புராண நிகழ்வுகளை பார்த்து இருக்கிறோம்..பிள்ளைக்கறி படைத்த நாயனார் சரித்திரம் வரை ..

தினம் ஓர் அதிதி.. (விருந்தாளி)- க்கு உணவளித்து பின்புதான் தான் உண்ணுவேன் என்ற விரதம் இருந்தவர்களை பற்றியெல்லாம் என் தந்தை சொல்ல கேட்டு இருக்கிறேன்.
.
நிற்க .. இதற்கும் மேலாக - நம் சந்ததியினருக்கு ஒன்றை சொல்லி தர வேண்டும் என்பது என் அவா.. ஆம்  ராஷ்டிரம் தேவோ பவ.. அதாவது மாதா, பிதா, குரு, தேசம்., தெய்வம் என்று சொல்லி தரவேண்டும். இதையே தேவர் பெருமான்  தேசமும் தெய்வமும் நம் இரு கண்கள் என்று தாரக மந்திரமாக கொண்டு வாழ்ந்தார்.  

 

இது இந்த காலக்கட்டத்தில் மிக அவசியமாகிறது.

தேசமே நமகெல்லாம் கொடுக்குது ... நாமும் சிறிது கொடுக்க பழகணும்... 

என்று வாழ்வோர் சிலரே..  
தேசமே நமெக்கெல்லாம் கொடுக்குது நாம் மேலும் அதனை சுரண்ட பழகணும் என்று வாழ்வோர் பலரே ...இந்த தேசத்தையும் தேசத்தின் பல பகுதிகளையும் அரசியல் என்ற பெயரால் ஆண்டு இருக்கின்றனர்  .
.
எதோ திட்டங்கள் போட்டு தேசத்தின் வளங்களை திருடியவர்களை கூட மன்னிக்கலாம். ஆனால் தேசத்தை காட்டி கொடுத்து உலகெங்கும் சொத்து சேர்த்த எட்டப்பர்களை எப்படி மன்னிப்பது.

 

 

 

அரசியல் வாழ்விற்கு, வருவோருக்கு முதலில் சொல்லி தர வேண்டியது ..
.
பாரில் எல்லா தேசங்களில் எங்கள் தேசம் உயர் தேசம்..
இதனில் நாங்கள் வாழ்ந்துள்ளோம் இதனுணவுண்டு வளர்ந்துள்ளோம்..

 என்ற சிந்தனை.

 

ஏன் திடீர் என்று இந்த சிந்தனை.. .ஆம் குடியரசு நாள் அன்றாவது தேசபற்று கொஞ்சம் கூட இருக்க வேண்டிய நாளில் தேசத்தின் எட்டப்பர்கள், பிரிவினை வாதிகள் அந்நிய கைகூலிகள் .. இவர்கள் நாட்டின் தலைநகரில் நடத்திய வன்முறை .நினைத்தால் நெஞ்சம் கணக்கிறது.. கண்களில் ரத்த கண்ணீர் வருகிறது. ஆம் இந்த வன்முறையில் டெல்லி செங்கோட்டையில் காலிஸ்தான் என்ற பிரிவினைவாதிகள் பேயாட்டம் ஆடி உள்ளனர். கிட்டத்தட்ட இரண்டு மாதமாக இதற்கான திட்டம் போட்டு உள்ளனர்.
.
லாலா லஜபதி ராய், பகத்சிங்  போன்ற எண்ணற்ற விடுதலை போராட்ட காரர்களை தந்த அதே பஞ்சாப்... சாராகாரி யில் சண்டையிட்ட அதே பஞ்சாப் மக்களை நினைத்தால் இன்றும் நரம்புங்கள் துடித்தெழும்.. ஆனால் வைரம் விளைந்த அதே பூமியில் தான் பிந்தரன்வாலே, பியான்ட் சிங், சத்வந்த் சிங் போன்ற கொலைகார பிரிவினை வாதிகளும் தோன்றினர்.

இப்பொழுது அதே மாநிலத்தில் உள்ள இடைத்தரகர்கள் விவசாயிகள் என்ற போர்வையிலே ஒரு தேசபக்தர் இந்த நாட்டை ஆள கூடாது என்ற ஒற்றை குறிக்கோளில் சதி செய்து வருகிறார்கள்.  
.
பாமரனும் கேட்கும் ஒரு கேள்விக்கு அவர்களிடம் பதில் இல்லை .. 

சட்ட்டத்தில் சில தவறு இருக்கலாம் ..ஒட்டுமொத்த  சட்டமே எப்படி தவறாக இருக்கும்? என்று கேட்கிறார்கள்

ஆம் ஒட்டுமொத்த நாட்டு மக்களால் தேர்ந்தெடுத்த அரசிற்கு சட்டம் இயற்றுவதுதான் ஜனநாயக கடமை.. இயற்றுகிற சட்டம் சரி பார்க்க வேண்டியது பாராளுமன்றத்தின் கடமை. அதையும் தாண்டி இயற்றப்பட்ட சட்டம் சரியாகத் தான் இருக்க வேண்டும் என்பதல்ல.

 ஆனால் ஒட்டு மொத்த சட்டமே தவறு என்றால் அது ஜனநாயகத்தையே இழிவு படுத்தும் செயலாகும்.  அதைத்தான் இந்த தரகர் கூட்டம் செய்கிறது.


ஜாங்கரி செய்து கொடுத்தால்  ஜாங்கரியில் சுற்று கம்மியாக இருக்கு எனலாம் . ஜாங்கரியில் இனிப்பு போதாது எனலாம்.. ஜாங்கரி கலர் சரி இல்லை எனலாம். இதற்கு பெயரே ஜாங்கிரி என்று வைக்க கூடாது.. பாதுஷா வை தான் நீங்க ஜாங்கிரி என்று சொல்ல வேண்டும் என்று தலைமை சமையல் காரருக்கு ஹோட்டலில் சாப்பிட வந்தவர் சொல்லுவது போல். பல முறை சந்தித்த எல்லா பேச்சு வார்த்தைகளிலும் இதுவரை பல விஷயங்களை திறம்பட சாதித்த.. அண்டை நாடுகளை அடக்கி ஒடுக்கிய ஓர் அரசு சொல்கிறது உங்களுக்கு இதில் என்ன மாற்றம் வேண்டும் தெளிவாக சொல்லுங்கள் என்று... அதெல்லாம் கிடையாது சட்டத்தையே திரும்ப பெறுங்கள் அது ஒன்றுதான் எங்கள் கோரிக்கை என்பது எவ்வளவு கேவலம். முன்பு ஒரு கதை கேள்வி பட்டு இருக்கிறோம் .. ஒரு குழந்தைக்கு தவறாக உரிமை கோரும் தாய்.. குழந்தை யாரிடமும் இருக்க வேண்டாம் நானும் கேட்டு விட்டேன் அவளும் கேட்டு விட்டாள் ஆகையால் குழந்தையை சரி பாதியாக வெட்டி கொடுங்கள் என்றாளாம்.. அதாவது குழந்தை சாக வேண்டும் அரசர் தீர்ப்பில் தோற்க வேண்டும் என்ற அந்த தாயின் அதே எண்ணம் தான் இந்த தீய சக்திகளுக்கு.    
.
இவர்களுக்கு தேச பக்தி என்பதன் அரிச்சுவடி கூட தெரியாது என்பதற்கு .. இவர்கள் குடியரசு தினம் அன்று ஆடிய வெறி ஆட்டமே சாட்சி.   
.
சாம; தான; பேத; முறைகள் முடிந்து விட்டன.    
.
தடி எடுத்தால் தான் குரங்கு அடங்கும் என்றால் அரசு தடி எடுக்கவும் தயங்கக் கூடாது. பஞ்சாபின் பெருமை மட்டுமல்ல ஒட்டு மொத்த பாரதத்தின் இறையாண்மை காக்கப் பட அரசு எது வேண்டுமானாலும் செய்யலாம்.   
.
ஆம் அந்த நடவடிக்கை ..நாட்டு மக்களுக்கு தன்னால் உணர்த்தும்  

ராஷ்ட்ரம் தேவோ பவ..... என்ற பதத்தின் முக்கியத்துவத்தை.

 

---G.Surya Narayanan, suryg12@gmail.com

Thursday, July 30, 2020

புகழோங்கிய பாரதம் ......3

ஹிந்து மன்னரால் ஆளப்பட்ட  முஸ்லிம்கள் அதிகம் இருந்த காஷ்மீரம், முஸ்லிம் மன்னரால் ஆளப்பட்ட ஹிந்துக்கள் அதிகம் வசித்த ஜுனாகட், ஹைதராபாத்   போன்றவைதான் இந்தியாவோடு இணைய யோசித்தவர்கள். 
.
ஜுனாகட், ஹைதராபாத்  இரண்டும் இரும்பு மனிதர் பொறுப்பிலும், காஷ்மீர்  நேரு அவர்கள் பொறுப்பிலும் ..இந்தியாவோடு இணைக்க முன்னேற்பாடுகள் நடந்தன. 
.
ஜுனாகட் ஒரு பெரும் பிரச்சினையாக இருக்க வில்லை. 
.
ஹைதராபாத் ... சர்தார் வல்லபபாய் படேல் அவர்கள் படை பலத்தை காட்டி மிரட்டி அடி பணிய வைத்தது வரலாறு. 

ஆனால் காஷ்மீர் என்பதன் மீது அன்றில் இருந்து இன்றுவரை பாகிஸ்தான் க்கு ஒரு கண் இருந்து கொண்டே தான் இருக்கிறது. 
.
பல பெரும் தலைவர்கள் முயற்சியாலும் ,குருஜி  கோல்வால்கர் அவர்கள் முயற்சியாலும் காஷ்மீர் மன்னர் மகாராஜா ஹரிசிங் காஷ்மீரத்தை பாரதத்துடன் இணைக்க ஒப்பு கொண்டார்.

பல நிபந்தனைகளுடனே காஷ்மீர் இந்தியாவுடன் இணைக்க பட்டது. அன்று முதலே இந்தியாவின் பகுதியாகவே இருக்கும் காஷ்மீர் நமக்கு பிரச்சனைக்கு உரியதாகவே இருந்தது. 

என்ன கேவலம் என்றால் இந்தியாவின் பகுதியை பிடிக்க அண்டை நாடான பாகிஸ்தான் தொடர்ந்து இன்று வரை போராடுகிறது. 
.
அது பெரிய விஷயமல்ல .. ஆனால் தேசத்தின் உள்ளேயே இந்த அண்டை தேசத்திற்கு ஆதரவாக உள்ள புல்லுருவிகள் இருப்பதுதான் துரதிர்ஷ்டம். 

விடுதலை பெற்ற அடுத்த வருடமே நம்முடன் போர் புரிய தயாரான கேவலமான நாடு பாகிஸ்தான். 

சேதமில்லா ஹிந்துஸ்தானம் என்ற பரந்த மனப்பான்மையுடைய நாம் எங்கே...மக்கள் செத்தாலும் பரவா இல்லை  தேசத்தின் எல்லைகளை விரிவாக்கம் செய்வோம் என்று பிடிவாதம் பிடிக்கும் பாகிஸ்தான் எங்கே
.
அன்றைய ஆட்சியாளர்கள் செய்த தவறால் 1948 ல் நடந்த போரில் நாம் வெற்றி பெற்றாலும் காஷ்மீரத்தின் ஒரு பகுதியை அந்நியர்கள் ஆக்கிரமிக்க விட்டு விட்டோம் அது இன்று வரை நம்மை துரத்துகிறது .
.
 எத்தனை எத்தனை பாரத அன்னையின் புதல்வர்கள் இன்று வரை இந்த பிரச்சினையால் , பாகிஸ்தானின் தீவிரவாத தூண்டுதலால் செத்து மடிகிறார்கள். இதற்கு தீர்வே இல்லையா என்று ஏங்கி கொண்டு இருந்த மக்களுக்கு கடந்த வருடம் 2019 ஆகஸ்ட் 5.. காதில் தேனாய் வந்திறங்கியது இரு செய்தி. சட்டம் 370  நீக்கம், மற்றும் ஜம்மு காஷ்மீர் பகுதி , ஜம்மு, காஷ்மீர், லடாக் என்று 3 ஆக பிரிக்க படுகிறது என்பதுதான் அந்த செய்தி.
.
இது பல பிரச்சினைகளுக்கு தீர்வாக அமைய உள்ளது விரைவில் பாரதத்தின் எல்லை சீரமைக்கப்படும்.  வரும் ஆகஸ்ட் 5 நாம் புதிய மாநிலங்கள் பிறந்த ஆண்டு விழாவை கொண்டாட இருக்கிறோம். பாரத் மாதா கி ஜெய் என்ற கோஷத்துடன் 

Wednesday, July 29, 2020

புகழோங்கிய பாரதம் ....2

ஆம் இறைவன் சித்தம் எவ்வாறாக இருந்தது ?
.
இரும்பு மனிதர் ..சர்தார் வல்லபபாய் படேல் அவர்களின் முயற்சியால் ஆங்கிலேய மற்றும் பிரிவினை வாத சக்திகளின் முயற்சி முறியடிக்கப் பட்டது.
.
பாகிஸ்தான் , இந்தியா என்ற இரு நாடாக மட்டும் பிரிந்தது.
.
சற்றே துண்டு துண்டு நாடாக ........
 யோசித்தாலும் மனது பதைபதைக்கிறது .
.
தமிழகத்திலே கூட உடனடி பிரிவினை வாதம் தலை தூக்கியது. ஆம் பெரியார் தலைமையில் நீதி கட்சி  ஆங்கிலேயருக்கு கொடி பிடிக்க துவங்கினர்  . சுதந்திரம் தேவை இல்லை என்று பிரகடனப் படுத்தினர்.
.
பிரிவினை வாதம் என்பது .. ஒரு தொற்று ஒரு இடத்தில் அது தொற்றினால் தேசம் முழுவதும் பரவும்.

படேல் போன்ற உறுதி மிக்க தலைவர்கள் இருந்ததால்  வேற்றுமையில்  ஒற்றுமை என்பது பாரத தேசத்தின் ஆன்மா சம்பந்த பட்டது. 
இங்கு யாருமே யாருக்கும் எதிரி இல்லை.
அவரவர் கோட்பாடில் வாழ்வோம் அனால் இணைந்து வாழ்வோம். ஒருவருக்கு ஒருவர் பரஸ்பரம் உதவுவோராக வாழ்வோம்.
.
இது ஒன்றும் நம் தேசத்திற்கு புதிதல்ல.. இது தேசத்தின் மாண்பு. என்ற உணர்வு தேசம் முழுவதும் பரவியது. பாரதம் கம்பீரமாக தன் புதிய வடிவில் நின்றாள்.


ஆனாலும் நேரு போன்றோரின் தேசம் சார்ந்த சிந்தனையில் ஏற்பட்ட சிதறலால் நம் தேசத்தோடு ஒரு நிரந்தர பிரச்சினை ..உடலில் வந்த புண்ணாக இருந்தது.

ஆம் அதுதான் பாரதத்தின் கிரீடமாக அமைந்த காஷ்மீரத்து பிரச்சினை........தொடர்வோம்.....

Tuesday, July 28, 2020

புகழோங்கிய பாரதம்

பாரதம் என்ற பெயர் பெற்ற இந்த நாடு அரசியல் காரணங்களுக்காக இந்தியா என்று அழைக்கப் படுகிறது.
.
ஆனால் பாகிஸ்தானிலும், வங்காளதேசத்திலும் மற்றும் சில நாடுகளிலும் நம் தேசம் ஹிந்துஸ்தான் என்று அடையாளப் படுத்தப்படுகிறது .
.
குறிப்பாக பாரதமாக இருந்த நாட்டில் இருந்து பிரிக்க பட்டபோது ஆங்கிலேயன் இந்த பாரதம் என்ற பெயர் அழிந்து போக வேண்டும் என்ற எண்ணம் கொண்டு இருந்தான்.
.
அ-கண்ட  பாரதம் ஏற்கனவே பல்வேறு காரணங்களால் சுருங்கி இருந்தது அது மேலும் சிதிலம் அடைய வேண்டும் என்று நினைத்தான் ஆங்கிலேயன் .
.
அந்த பிரிவினையில் ஹிந்து ஸ்தான் , பாக் ஸ்தான்  என்று இரு ஸ்தானங்கள் உருவாக்கப்பட்டது.
.
கொடிய நாகத்தின் விஷத்தை கொண்டு இருந்த ஆங்கிலேயன் கூடவே ஒரு சதி செய்தான் நாட்டில் இருக்கும் சமஸ்தானங்கள் யார் வேண்டுமானாலும் இந்த இரண்டில் யாரோடு வேண்டுமானாலும் இணைந்து கொள்ளலாம் என்ற விஷ விதையை தூவினான்.

 கிருஷணர் கூறினார்

யதா யதா ஹி தர்மஸ்ய க்லானிர் பவதி பாரத
அப்யுத்தானம் அதர்மஸ்ய ததாத்மானாம் ஸ்ருஜாம்யஹம் |
பரித்ராணாய ஸாதூனாம் விநாசாய ச துஷ்க்ருதாம்
தர்ம ஸம்ஸ்தாபனார்த்தாய ஸம்பவாமி யுகே யுகே ||
– என கீதையில் மொழிகிறான் கண்ணன்.
பகவான் கிருஷ்ணர்
எப்பொழுதெல்லாம் தர்மம் குலைகிறதோ, எப்பொழுதெல்லாம் அதர்மம் தலை விரித்தாடுகிறதோ, எப்பொழுதெல்லாம் சாதுக்கள் துன்பத்திற்கு ஆளாகின்றார்களோ அப்பொழுதெல்லாம் தர்மத்தை நிலைநாட்டுவதற்கும், தீயவர்களை அழிப்பதற்கும், சாதுக்களை காப்பதற்கும் நான் யுகம் யுகமாக அவதரிக்கிறேன் என்பது இதன் பொருள்.

கூடவே தெய்வம் மனுஷ்ய ரூபேனா .. அதாவது கடவுள் ஏதாவது ஒரு மனித ரூபத்தில் வருவார். என்பதும் இன்றளவும் வழக்கில் இருந்து வருகிறது.

இத்தருணத்தில் இறைவன் இரும்பு மனிதர் வல்லபபாய் படேல் உருவத்தில் வந்தார்.

யோசித்து பாருங்கள் அன்பர்களே !  ஹைதராபாத்தும் , ஜுனாகத் ம், காஷ்மீரமும்  இன்னும் சில சமஸ்தானங்களும் பாகிஸ்தானோடு சேர்ந்து .. இவைகள் போக மீதி மட்டும்  நம் பாரத நாடு இருந்து இருந்தால் .. இன்று இந்த உலகிற்கே வழி காட்டியாக உள்ள நாடு இருந்து இருக்குமா? ஆம் துண்டு துண்டாக சிதறி இருக்கும்.
.

ஆனால் இறைவன் சித்தம் எவ்வாறாக இருந்தது



அறிவோம் அடுத்த பதிவில் ..

Tuesday, July 14, 2020

அன்பார்ந்த தேச பற்றாளர்களே,

இந்த வலைப்பூ வின் வழியாக நாம் பாரத தேசத்தின் பெருமைகளையும், சாதனைகளையும், சாதித்தவைகளையும், சாதிக்க வேண்டியவைகளையும் தொடர்ச்சியாக பார்க்கலாம் விவாதிக்கலாம், மேம்படுத்தலாம்.
.
என்னோடு பயணிக்க நினைப்போர் ,
.
என்னில் ஒருவராக மதிக்க படுவர்..
இது உங்கள் சிந்தனைக்குமான இடமாகவும் இருக்கும்.
.
வாருங்கள் ..
பயணிப்போம்


இங்ஙனம்.. உங்கள் சூரி